வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (14:01 IST)

அமேதிதான் எனக்கு எல்லாமே - அமேதியிலேயே குடியேறும் ஸ்மிருதி இரானி

அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்மிருதி இரானி தனது வீட்டையும் அங்கேயே கட்டிக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

அமேதி தொகுதிக்கும் காங்கிரஸுக்கும் உள்ள உறவு எவ்வளவு பழமையானதோ, அதே அளவுக்கு ஸ்மிருதி இரானிக்கும், அமேதிக்குமான உறவும் பழமையானது. மக்களவை தேர்தலில் காங்கிரசின் வெற்றி தொகுதிகளில் முன்னனி தொகுதி அமேதி. ராஜீவ் காந்தி நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் எப்போதும் காங்கிரஸுக்கு அமேதி மீது தனிபாசம். கடந்த 2004 முதல் அமேதியின் எம்.பியாக தொடர்ந்து ராகுல் காந்தியே இருந்து வந்துள்ளார். சென்றமுறை ராகுல்காந்தி அமேதியில் போட்டியிட்டபோது எதிர்த்து போட்டியிட்டவர் ஸ்மிருதி இரானி. ஆனால் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த முறை அமேதி ஸ்மிருதிக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது. ராகுலை தூக்கியெறிந்துவிட்டு ஸ்மிருதியை தங்களது எம்.பியாக ஆக்கி கொண்டுள்ளது. ஸ்மிருதி இரானி அமேதியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஸ்மிருதி இரானியின் சொந்த வீடு கவுரிகஞ்சில் இருக்கிறது. ஆனால் அமேதியில் தங்க முடிவெடுத்துள்ள ஸ்மிருதி தனக்கு சொந்தமாக அமேதியில் வீடு கட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அமேதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள்.