வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:26 IST)

தறிகெட்டு பைக்குகளை மோதி வீசி சென்ற வேன்! – ஒட்டன்சத்திரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

accident
திண்டுக்கல் மார்க்கெட்டிலிருந்து சென்ற மினிவேன் ஒன்று எதிரே வந்த பைக்குகள் பலவற்றை மோதி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை லோடு ஏற்றிக் கொண்டு மினிவேன் ஒன்று கோவை புறப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே பைபாஸில் சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர் சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு பலகையை உடைத்துக் கொண்டு எதிர் சாலையில் பாய்ந்த வேன் அங்கு சென்றுக் கொண்டிருந்த பைக்குகளையும் மோதி வீசிக்கொண்டு சென்றது. இதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பி ஓடிய நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.