புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (12:45 IST)

சின்மயி கூறுவது பொய் ; என் வீட்டில்தான் அவர் இருந்தார் : உண்மையை உடைத்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்

சின்மயி கூறும் பாலியல் புகாரில் உண்மையில்லை என சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.

 
13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பட்டாளர் சுரேஷ் வீடியோ மூலம் அளித்த பேட்டியில் “சின்மயி கூறுவது போல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அந்த நிகழ்ச்சி முடிந்ததும், நான், எனது மனைவி, சின்மயி மற்றும் அவரின் தாய் எங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டோம். மறுநாள் காலை வைரமுத்து சென்னை திரும்பிவிட்டார். எனவே, சின்மயி கூறுவது சுத்தப் பொய். எங்களைப் போல் வெளிநாட்டு தமிழர்களை அவர் அவமானம் செய்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.