புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (11:03 IST)

கேரளாவிலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போது கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தை போலவே தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எர்ணாகுளம் திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
மேலும் கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன