புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (19:04 IST)

பாஜகவை நம்பி ஏமாந்த ஓ.பி.எஸ் !-முன்னாள் எம்பி.KC.பழனிசாமி

பாஜகவை நம்பி ஏமாந்த ஓ.பி.எஸ் !-முன்னாள் எம்பி.KC.பழனிசாமி
உறவாடி கெடுப்பதற்கு சிறந்த உதாரணம் பாஜக. உறவுக்கு கைகொடுத்த  ஓ.பன்னீசெல்த்தை தாமரை சின்னத்தில் நிற்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்  தாமரையில் போட்டியிடுவாரா? அல்லது தனித்து நின்று தன்மானம் காப்பாரா?   என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''அதிமுக-வை சிறு சிறு குழுக்களாக சிதறடித்து அதன் வலிமையை குறைத்து அந்த குழுக்களை தனித்தனியாக பாஜகவுடன் இணைத்து பலம்பெறுவது தான் பாஜகவின் நோக்கம்.இதுபோல் நடக்கும் என்று 2018-லே #ஓபிஎஸ் & #இபிஎஸ் இருவரையும் எச்சரித்ததால் ஏற்பட்டது தான் கே.சி.பி-யின் நீக்கம். 
பாஜகவை நம்பி ஏமாந்த ஓ.பி.எஸ் !-முன்னாள் எம்பி.KC.பழனிசாமி
2018-லிருந்து பாஜக எதிர்ப்பில் உறுதியான நிலைப்பாட்டில் கே.சி.பி இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமியோடு கருத்து வேறுபாடு இருந்தாலும் பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் உறுதியாக அதிமுக-வை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கும் கே.சி.பழனிசாமி ''என்று தெரிவித்துள்ளார்.