1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:02 IST)

ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன்!

sasikala panruti
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடர்ந்தால் அக்கட்சியின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தோல்வியை சந்தித்துள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றும் அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை என்றும் தெரிவித்தார்
 
எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது என்றும் அதிமுகவை காப்பாற்ற யார் முன்வந்தாலும் என் ஆதரவு தருவேன் என்றும் தெரிவித்தார் 
 
டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார் என்றும் சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்கப் போராடுகிறார் என்றும் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது என்பதால் அதற்கு அவர்கள் போராடுகிறார் என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்