புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified புதன், 14 செப்டம்பர் 2022 (11:16 IST)

பெரியார் பெயரில் உணவகமா?? இருக்கக் கூடாது..! – இந்து அமைப்புகள் எதிர்ப்பு!

periyar
கோவையில் பெரியார் பெயரில் உணவகம் திறப்பதற்கு இந்துமத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே அமைந்துள்ளது கண்ணாரபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் “தந்தை பெரியார் உணவகம்” என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் முழுவதுமாக முடிந்து இன்று உணவகம் திறப்பு விழா நடைபெற இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்த சிலர், பெரியார் பெயர் கொண்ட உணவகத்தை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் இந்து அமைப்பின் உணவகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சில பகுதிகளில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசுதல் போன்ற செயல்களால் பரபரப்பு எழுந்த நிலையில், தற்போது பெரியார் பெயரை உணவகத்திற்கு வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.