திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 மே 2021 (18:20 IST)

எனது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சருக்கு நன்றி: ஓபிஎஸ் டுவிட்

முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் மூலம் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் தங்கு தடையின்றி நடக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு அரசு பணிகளில் குறுக்கீடு செய்து நோய் தடுப்பு நடவடிக்கையை பணிகளில் தொய்வு ஏற்படும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
இந்த அறிக்கையை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யார் நீக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை ஓபிஎஸ் அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் அறிக்கை வாயிலாக கேட்டிருந்தேன்.
 
இதனையறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், "தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்" என்ற உத்திரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக எனக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். இதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்