நிவாரணம் சரியா கிடைக்கணும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வர கூடாது! – ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் அடுத்த இரு வாரங்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து ஆலோசித்து வருகிறார். அதில் ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக சென்றடைதல், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், படுக்கைகளை தேவையான அளவு ஏற்படுத்துதல் போன்றவற்றை முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.