செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (09:05 IST)

தம்பிக்கு மூச்சுத்திணறல்… மருத்துவமனையில் இடமில்லை… முதல்வருக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் விருமாண்டி!

இயக்குனர் விருமாண்டி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனது தம்பி உள்ளிட்ட 30 பேருக்கு படுக்கை வசதிகள் இல்லை என டிவிட்டரில் கூறியுள்ளார்.

க பெ ரணசிங்கம் படத்தை இயக்கியவர் விருமாண்டி. அவரின் தம்பிக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் கொரோனா சோதனை செய்துள்ளனர். அதில் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் மூச்சுத் திணறல் நிற்காததால் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கிட்டத்தட்ட 30 பேருக்கு படுக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் டிவிட்டர் மூலமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது சம்மந்தமான அவரின் டிவீட்டில் ‘முதல்வர் அவர்களுக்கு தற்போது மதுரை GH இல் இருக்கிறேன் ஐயா இங்கு சுமார் 30 க்கு மேற்பட்டோர்கள் bed இல்லாமல் இருக்கிறோம் உதவி பண்ணுங்கள் ஐயா’ எனக் கூறியுள்ளார்.