1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS Team Madhusudhanan Arrest In RK Nagar

ஆர்கே நகர் விவகாரம்: ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் அதிரடி கைது!

ஆர்கே நகர் விவகாரம்: ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் அதிரடி கைது!

ஆர்கே நகர்
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் நிர்வாக சீர்கேடு நடப்பதாக அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் தனது ஆதரவாளர்களுடம் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது ஆர்கே நகர் தொகுதி இன்னமும் காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு நடைபெற இருந்த இடைத்தேர்தலும் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டது.
 
அந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகள், தீபா, திமுக என பல கட்சிகளும் சுயேட்சைகளும் என பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் போட்டியிட்டார்.
 
இந்நிலையில் ஆர்கே நகரில் நிர்வாக சீர்கேடு நடப்பதாக ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் தண்டையார்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முன்பாக உள்ள போக்குவரத்து சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டடார்.
 
இந்த தொகுதி புரட்சி தலைவி அம்மா அவர்களின் தொகுதி, ஆனால் இந்த தொகுதி குப்பைக் கூலமாக காணப்படுகிறது. மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரில் சாக்கடை கலந்து வருகிறது, மெட்ரோ வாட்டர் வண்டி சரியான முறையில் மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதில்லை.
 
இதனை சரி செய்ய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மதுசூதனன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மதுசூதனனை, காவல்துறையினர் கைது செய்தனர்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
காஷ்மீருக்குள் எங்கள் ராணுவம் நுழையும்; சீனா எச்சரிக்கை