காஷ்மீருக்குள் எங்கள் ராணுவம் நுழையும்; சீனா எச்சரிக்கை
பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் தவிர்த்து மூன்றாவது நாட்டின் ராணுவம் காஷ்மீருக்குள் நுழையும் என்று சீனாவின் மேற்கு இயல்பான பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குநர் லாங் ஷிங்சன் கூறியுள்ளார்.
சீனாவின் பத்திரிக்கைகள் இந்தியாவை விமர்சித்து கேலி செய்து எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதுவும் குறிப்பாக சீனாவின் பிரபல குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து அவ்வப்போது கட்டுரை வெளியிட்டு வருகிறது.
தற்போது சிக்கிம் பகுதி எல்லையில் இந்தியா சீனா இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். சீன அரசு இந்திய ராணுவத்தை பின்வாங்குமாறு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் தற்போது எல்லைப் பகுதியில் கூடாரம் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் மேற்கு இயல்பான பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குநர் லாங் ஷிங்சன் கூறியதாவது:-
பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியா கேட்டுக்கொண்டால் அப்பகுதி பொதுவான பகுதியாக இருக்கும். எந்த தொல்லையும் இருக்காது. இந்தியா தனது ராணுவத்தை பின்வாங்க வேண்டும். பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் தவிர்த்து காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என கூறியுள்ளார்.
இதன்மூலம் சீனா இந்தியாவுடன் போரில் ஈடுப்படாது என்பது தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா காஷ்மீருக்குள் நுழைந்தால் அமெரிக்கா பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழையும். ஆகையால் சீனா பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீருக்குள் நுழைய வாய்ப்பு இல்லை. இருந்தும் அவர்கள் எல்லைப் பகுதியை கைப்பற்ற இந்தியாவை அவர்களால் முடிந்த வழிகளில் மிரட்டி வருகின்றனர்.
சிக்கிம், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவை இணையக்கூடிய எல்லைப்பகுதியை இந்தியா விட்டுக்கொடுத்தால் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது. இந்த அச்சத்தினாலே இந்தியா விட்டுக்கொடுக்காமல் பிடியில் உள்ளது.