செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (13:27 IST)

பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்ந்து நீடிக்கிறது.. புதுவை நிர்வாகி அறிவிப்பு..!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது என நேற்று அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக, பாஜக கூட்டணியில் தொடர்கிறது என புதுவை மாநில ஓபிஎஸ் அதிமுக பிரிவின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
புதுச்சேரி ஓபிஎஸ் அணி நிர்வாகி ஓம் சக்தி சேகர் என்பவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அதிமுக என்றால் அது ஓபிஎஸ் அணிதான் என்றும் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அதிமுக இடம் பெறும் என்றும் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் ஓம் சக்தி சேகர் பேட்டி அளித்துள்ளார்.  
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஓபிஎஸ் அணி பாஜக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran