1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜனவரி 2021 (08:50 IST)

இந்த வரிகள் யாருக்கானது? ஓபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டரால் பரபரப்பு!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எழுந்த போது நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஒப்புக் கொண்டார்
 
இருப்பினும் தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலுக்கு பின்னரோ முதல்வர் வேட்பாளர் பிரச்சனை மீண்டும் எழ வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக ஒருவேளை வெற்றி பெற்று ஈபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்கும் போது ஓபிஎஸ் அவர்கள் பிரச்சனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது 
 
மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்னும் ஈபிஎஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக மனதளவில் ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் அவர்களது பேச்சுகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த போஸ்டரில் உள்ள வரிகள் யாருக்கானது? என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் இடையே எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில் உள்ள வரிகள் இவைகள் தான்:
 
 
ஒபிஎஸ் என்கிற தலைவரின் பலம்
 
சொல் அல்ல ; செயல்
 
அவரின் அடையாளம்
 
ஆரவாரம் அல்ல அமைதி
 
அவரின் வெற்றி
 
அவருக்கானது அல்ல ; மக்களுக்கானது, மாநிலத்திற்கானது
 
என்ற வாசகங்களுடன் விளம்பரம்
 
பணிவாலும், பணியாலும் செல்வாக்கு பெற்றவர் ஒபிஎஸ் என்றும் பதிவு