செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (10:18 IST)

தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை

தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை
 
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆண்டிபட்டி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியம் 8-வது வார்டு கவுன்சிலராக தேர்வு பெற்றவர் தமிழ்செல்வன். இவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் திடீரென தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறினார். 
 
மொத்தம் 14 வார்டுகள் இருந்த நிலையில் அதில் தி.மு.க 7, அ.தி.மு.க 7 என சம அளவில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் தான் 8-வது வார்டு திமுக கவுன்சிலரான தமிழ்செல்வன் திடீரென அ.தி.மு.கவில் இணைந்தார். இவரது முடிவால் கடமலை-மயிலை ஒன்றிய சேர்மன் பதவி அ.தி.மு.க வசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திடீரென ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சில தமிழ்செல்வன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.