ஒபிஎஸ் மகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்டமாக வந்து தனது வேட்பு மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து மதிப்பு மற்றும் தன் மீதான வழக்கு விவரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி ரவீந்திரநாத் குமாரின் சொத்து மதிப்பு விவரம் இதோ..
தனது கையில் ரொக்கமாக 82 ஆயிரத்து 714 ரூபாயும், தனது மனைவி கையில் 62 ஆயிரத்து 450 ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்குகளில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 63 ரூபாய், பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாயும் இருப்பதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.
மேலும், தனது மனைவிக்கு பெரியகுளம் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 307 ரூபாய் இருப்பதாக ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கி கிளையில் ஒரு லட்சத்தி 63 ஆயிரத்து 153 ஒரு ரூபாயும், மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே கிளையில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 67 ரூபாய் இருப்பதாகவும் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாயும் விஜயானந்த டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் பங்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மீட்டர் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் 6 லட்சத்து 37 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் ஐ-10 கார் மற்றும் 36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டயோட்டா கார் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரவீந்திரநாத் குமாரிடம் 120 கிராம் தங்கமும் 1.1 கிலோ வெள்ளியும் அவரது மனைவியிடம் 76வது கிராம் தங்கமும் 4.75 கிலோ வெள்ளியும் 10 கேரட் வைரம் அவரது மகன் ஜெயந்த் இவ்விடம் 120 கிராம் தங்கமும் மகள் ஜெயஸ்ரீ இடம் 300 கிராம் தங்கமும் மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கமும் இருப்பதாக சொல்லி உள்ளார். இப்படி ரவீந்திரநாத் குமாரிடம் இருக்கும் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 24 ரூபாய், அவரது மனைவி பெயரில் 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய், மகன் ஜெய்தீப் 5 லட்சத்து 23 ஆயிரத்து 256 ரூபாய், மகள் ஜெயஸ்ரீ 10 லட்சத்து 60 ஆயிரத்து 67 ரூபாய், மகன் ஆதித்யா 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
விவசாய நிலமாக ரவீந்திரநாத் குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரை குளம் ஆகிய கிராமங்களில் 31.37 ஏக்கர் நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் 2011-ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும் அந்த நிலத்தில் 15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும் தற்போது அதன் மதிப்பு தோராயமாக ஒரு கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 136ரூபாய் எனவும் தனக்கு பூர்வீக சொத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வங்கிகள் மற்றும் தனிநபர்கள் இடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்த வேண்டிய தொகை 3 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 79 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அதில் தனது தம்பி பிரதீப்புக்கு 33 லட்சத்து 3 ஆயிரத்து 131 56 ரூபாய், தனது தாய் விஜயலட்சுமிக்கு 83 லட்சத்து பத்தாயிரம் ரூபாயும் கடன் செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.