புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (11:31 IST)

வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? எகிறிய ஓபிஎஸ்

வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் ஏது இருக்கிறதா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்த நிலையில் இன்று திமுக அதிமுக தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளது.
 
தேனி தொகுதியில் போட்டியிடும் மகன் ரவீந்தருக்கு, ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரப்புரை செய்து வருகிறார். பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலையே ஊக்கிவிக்கின்றன என நேற்று நீதிமன்றம் வேதனை தெரிவித்த்து.
 
இந்நிலையில் தனது மகனை தேர்தலில் முன்நிறுத்தியிருக்கும் ஓபிஎஸ்சிடம் வாரிசு அரசியல் செய்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அவர் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? அப்படி ஏதும் இல்லை. கட்சிக்காக தொடர்ச்சியாக பணி ஆற்றியவர்களுக்கு சீட் கொடுக்கப்படுகிறது என கூறினார்.