1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (18:43 IST)

ஈபிஎஸ் இடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்: பரபரப்பு தகவல்

ஈபிஎஸ் இடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்: பரபரப்பு தகவல்
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அதனை முறையாக அறிவித்த ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் அவரது வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்தார் 
 
இந்த நிலையில் தங்களது வீட்டிற்கு வந்த முதல்வர் ஈபிஎஸ் அவர்களிடம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தனது இல்லத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஓபிஎஸ் வரவேற்றார் என்பதும், ஈபிஎஸ் மட்டுமின்றி வழிகாட்டுதல் குழுவைச் சேர்ந்த 11 பேரும் ஓபிஎஸ் இடம் வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு இந்த சந்திப்பின் மூலம் முற்றிலும் நீங்கி விட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்