1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (18:40 IST)

’மாஸ்டர்’ படத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் காட்சிகளா? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாகவும் விஜய் பேசும் சில வசனங்கள் இருவரையும் தாக்கும் வகையில் இருப்பதாகவும் ஒரு வதந்தி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது 
 
ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சதவீதம் கூட அரசியல் இல்லை என்றும் எந்த அரசியல்வாதியையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும் காட்சிகள் இல்லை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
 
வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அடுத்து தமிழகத்திலும் அதே தேதியில் திரையரங்குக்கு திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது