1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops says will joined with ttv dinakaran and sasikala

டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ் பேட்டி..!

டிடிவி தினகரன்
அதிமுகவிலிருந்து கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு விட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரன் உடன் கூட சேர்ந்து பணிபுரிவேன் என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 
 
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காரணமாக அதிமுக தற்போது முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்று விட்டது என்பதும் விரைவில் அவர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தற்போது அதிமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அவரது ஆதரவாளர்களின் கேள்வியாக இருந்தது. 
 
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தி அவர்களிடம் பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம் காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்படுவேன் என்றும் வாய்ப்பிருந்தால் விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார். 
 
ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் சேர்ந்து அரசியல் செய்வதை விட வேறு வழியில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம்!