திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (11:12 IST)

அதிமுகவை யாரும் பிடிக்க முடியாது; சரியாக வழி நடத்துகிறோம்! – ஓபிஎஸ் பதில்!

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்ற கோரி அதிமுக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதிமுகவை யாரும் பிடிக்க முடியாது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியமைத்த நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுகவை கண்டித்தும், மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி இன்று அதிமுக தமிழக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “தமிழகத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை மக்களை ஏமாற்றாமல் நிறைவேற்ற வேண்டும் என்றே போராட்டம் நடத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுகவை மீட்போம் என டிடிவி தினகரன் பேசியுள்ளது குறித்து பேசிய அவர் “அதிமுகவை யாரும் பிடிக்க முடியாது. கடந்த நான்கரை ஆண்டுகளாக இருவருமாக சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.