திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (11:01 IST)

கடித்த பாம்பை கையோடு கொண்டு வந்த சிறுவன்! பதறிய டாக்டர்கள்! – காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

காஞ்சிபுரத்தில் சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பையும் எடுத்துகொண்டு மருத்துவமனை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமுவின் 7 வயதான மகன் தர்ஷித். சமீபத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த தர்ஷித் வயலில் விளையாடி கொண்டிருந்தபோது தன்னை ஏதோ ஒன்று கடித்துள்ளது. உடனடியாக அது பாம்பு என அறிந்த தர்ஷித் அதை துரத்தி சென்று அடித்து கொன்றதுடன், அதை எடுத்துக் கொண்டு பெற்றோர் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான்.

பாம்புடன் சிறுவன் வந்ததை கண்ட அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்து சிறுவனை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவன் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.