1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2023 (17:19 IST)

நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்று கொள்ளவில்லை: ஈரோடு தேர்தல் குறித்து ஓபிஎஸ்..!

ops
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து கருத்து கூறிய ஓ பன்னீர்செல்வம் நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார் என்பதும் அவர் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் வாக்குகள் பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து பலர் கருத்து கூறிவரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது வரலாறு காணாத படு தோல்வியை அதிமுக அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான். 
 
ஒரு நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் இந்த தேர்தலின் முடிவு காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva