1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2023 (07:45 IST)

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி.. ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு

OPS
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஓபிஎஸ் தெரிவித்துள்ளதை அடுத்து இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. 
 
ஆனால் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இன்னும் ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு வேட்பாளரும் ஓ பன்னீர் சொல்லும் தரப்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிட்டால் நிச்சயம் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் தோல்வி அடையவே வாய்ப்பு இருப்பதாக அரசியல விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இதனை அடுத்து இரு தரப்பு அதிமுகவின் ஆதரவில் பாஜக போட்டியிடவும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva