வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (11:59 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: விருப்பமனு அளிக்க கடைசி தேதியை அறிவித்த ஈபிஎஸ்

Edappadi
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக தரப்பில் வேட்பாளர் விருப்பமனு தாக்கல் செய்ய தேதியை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் ஜனவரி 26 ஆம் தேதி கடைசி தேதி என்றும் அறிவித்துள்ளார் 
 
 இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூபாய் 15,000 கட்டண தொகை செலுத்தி அதிமுக தலைமை அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran