1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Weather Alert: Rising Temperatures and Isolated Rainfall Predictions

கோடை தொடங்கும் முன்பே கொளுத்தும் வெயில்.. இந்த ஆண்டு ரொம்ப கொடூரமா இருக்கும்?

தமிழக வானிலை
தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 
 
இன்றைய நிலவரப்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
வெப்பம் ஒருபுறம் வாட்டினாலும்,  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைசார்ந்த பகுதிகளில் இன்று லேசான தூறல் இருக்கக்கூடும். இதனை தொடர்ந்து, நாளை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
விஜயிடம் பேசிய பவன் கல்யாண்!. என்.டி.ஏ. கூட்டணியில் தவெக?!.. பரபர அப்டேட்..