செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (20:21 IST)

துணிவிருந்தால் திருப்பரங்குன்றத்திற்கு வாருங்கள்: திமுகவுக்கு ஓபிஎஸ் சவால்

இரண்டு பெரிய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் இரண்டு பெரிய தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத ஒரு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் 'நெஞ்சில் துணிவிருந்தால் திருப்பரங்குன்றத்திற்கு வாருங்கள், நேருக்கு நேர் சந்திப்போம் என திமுகவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். மேலும் ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் எனக்கூறிய ஸ்டாலின் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் பொய் பேசுபவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தான் பொருந்தும் என்றும், மு.க.ஸ்டாலின் மீண்டும் பொய் புகார் கூறினால் நீதிமன்றத்தை நாடுவோம் துணைமுதல்வர் கூறியுள்ளார்.