திட்டம் ஜெயிச்சா நீங்க காரணம்.. தோற்றால் மத்தவங்க காரணமா? – திமுகவை கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை!
ஒரு திட்டம் வெற்றிபெற்றால் திமுக காரணம் என்றும், இல்லாவிட்டால் பிறர்மீது திமுக பழிபோடுவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி இருப்பதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது திமுகவிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மத்திய அரசின் அக்கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றின் இருப்பை கண்காணித்து தேவைகேற்ப மத்திய அரசிடமிருந்து கேட்டு பெற்று அல்லது இறக்குமதி செய்வது மாநில அரசின் பொறுப்பாகும். ஆனா இந்த பொறுப்பை உணராமல் வெற்றி பெற்றால் அதற்கு திமுக காரணம் என்றும், பிரச்சினை என்றால் பிறர் மீது பழி போடுவதும் திமுகவிற்கு வாடிக்கையாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் மின்வெட்டு பிரச்சினைகள் எழும் முன் தக்க நடவடிக்கை எடுக்குமாறும், பின்னர் மற்றவர்கள் மேல் பழி சொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.