வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (18:48 IST)

மதுரை சாலையில் இருந்த டீக்கடையில் டீ அருந்திய துணை முதல்வர்!

மதுரை சாலையில் இருந்த டீக்கடையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது கட்சியினருடன் டீ அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மதுரை விமான நிலைய சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
 
முத்துராமலிங்க தேவரின் தங்க கவச உடையை ஒப்படைக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மதுரை வந்தார். இந்த நிலையில் மதுரை விமான நிலையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் காரை நிறுத்தச் சொன்னார் 
 
இதனை அடுத்து காரிலிருந்து கீழே இறங்கிய துணை முதல்வர் அங்கிருந்த டீக்கடையில் உட்கார்ந்து டீ அருந்தினார். அவரை அடுத்து அவருடன் வந்த அனைவரும் டீ அருந்தினர். அதன்பின்னர் டீக்கடைக்காரரை பாராட்டிய துணைமுதல்வர் அனைத்துக்கும் அவரே பணம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது துணை முதல்வர் டீக்கடையில் டீ சாப்பிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது