''மாஸ்டர்'' பட டீசர் எப்போது ரிலீஸ்...?? புதிய அப்டேட்... விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த வருடம் ஏப்ரலில் வெளியாகி இருக்கவேண்டிய படம் விஜய்யின் மாஸ்டர். ஆனால் கொரோனாவால் தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் வரும் தீபாவளிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடந்த வருடம் பிகில் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்து இவர் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனனுடன் இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வணிகரீதியாகவும் பெரும் விலைக்குப் போயுள்ளது. ஆனால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டி ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவில்லை எனப் படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், 2021ல் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படம் குறித்து எந்த அப்டேட்டும் சமீபத்தில் வராத நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் வரும் தீபாவளிக்கி மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.