1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (16:11 IST)

தரமற்ற பொங்கல் பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி: ஓபிஎஸ் கண்டனம்

ops
2022ஆம் ஆண்டு தரமற்ற பொங்கல் பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டும் பொங்கல் பொருள்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று வெளியான செய்திக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
2022ஆம் ஆண்டு சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் மிகவும் தரம் குறைந்ததாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது 
 
இந்த நிலையில் அதே நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டிலும் பொங்கல் பொருட்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
2022ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் பாமாயில் பருப்பு போன்றவற்றை விநியோகம் செய்ய அனுமதி வழங்கியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்காமல் அபராதம் மட்டும் அரசு விதித்தது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் புதிய ஒப்பந்த ஆணைகளை வழங்கி அவற்றை நியாயப்படுத்தி பேசுவது என்பது உலகில் எங்கும் கண்டிராத ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்