திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (14:49 IST)

தைரியம் இருந்தா தனிக்கட்சி தொடங்குங்க..! – ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் சவால்!

இன்று அதிமுக தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு கூட்டம் நடத்திய நிலையில் அதில் ஓபிஎஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே கட்சி தொடர்பான கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கட்சியினர் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

இப்படியாக இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “கூவத்தூரில் தொடங்கி பொதுக்குழு உறுப்பினர்கள் வரை அனைவரையும் எடப்பாடி பழனிசாமி கைக்குள் வைத்திருப்பதற்கு பணம்தான் காரணம். யார் இந்த எடப்பாடி பழனிசாமி. அவருக்கு என்ன வரலாறு தெரியும்.

50 ஆண்டுகளாக பலரும் ரத்த சிந்தி வளர்த்த இயக்கத்தை கபளீகரம் செய்ய நினைத்தால் அது முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி நடத்துவேன் என்று சொல்வாரா?” என பேசியுள்ளார்.

Edit By Prasanth.K