திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (09:03 IST)

ஓபிஎஸ், குஷ்பு, எல்.முருகன், துரைமுருகன் வாக்களித்தனர்!

ஓபிஎஸ், குஷ்பு, எல்.முருகன், துரைமுருகன் வாக்களித்தனர்!
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் தேனி தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல் நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நாம் தமிழர் கட்சியின் சீமான் வளசரவாக்கம் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை அருகே உள்ள கல்லூரியிலும் வேலூர் காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் வாக்களித்தனர் 
 
அதேபோல் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வாக்களித்தார். ஏஆர் ரகுமான் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். சென்னையில் எளிமையாக வரிசையில் நின்று நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார் தனது வாக்கை பதிவு செய்தார். சிவகங்கையில் ப சிதம்பரம் தனது வாக்கை திவு செய்தார்