செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (08:00 IST)

பிரதருடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இன்று சந்திப்பு: சசிகலா விவகாரம் பேசப்படுகிறதா?

பிரதருடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இன்று சந்திப்பு: சசிகலா விவகாரம் பேசப்படுகிறதா?
பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் சந்தித்து பேச உள்ளனர் 
 
இன்றைய சந்திப்பின் போது சசிகலா, அதிமுக பாஜக கூட்டணி மற்றும் மேகதாது விவகாரம் ஆகியவை குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று காலை டெல்லி சென்ற பன்னீர்செல்வம் மற்றும் நேற்று இரவு டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தங்கமணி வேலுமணி ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருப்பதாகவும் இவர்கள் இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பிரதமர் மோடி திடீரென அதிமுக பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின்னர் இன்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.