மக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்! – பிரதமர் மோடி வேண்டுகோள்!
மாதம்தோறும் மன் கீ பாத்தில் பேசி வரும் பிரதமர் மோடி கைத்தறி ஆடைகளை வாங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் மன் கீ பாத் நிகழ்ச்சி வழியாக பேசி வருகிறார். பலசமயம் மக்கள் பலருமே அவருடன் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்று 79வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசி வரும் பிரதமர் மோடி “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியை ஏந்தி வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது. 2011ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் காதி விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. ஊரகப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கைத்தறி ஆடைகளை மக்கள் வாங்கி அணிய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.