ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (09:35 IST)

தேர்தல் வியூகத்தில் கோட்டை விட்ட தினகரன்: மனம் திறந்த தங்க தமிழ்ச்செல்வன்!

தேர்தல் வியூகம் அமைப்பதில் தினகரனை ஈபிஎஸ் - ஓபிஎஸ் வென்றுவிட்டனர் என தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
தேர்தலுக்கு முன்பே துவங்கிய தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் பனிப்போர் ஒரு ஆடியோ மூலம் வெளி உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகியது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு கட்சியை விட்டு தங்க தமிழ்ச்செலவன் நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் அறிவித்துவிட்டார். 
இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்செல்வனிடம் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக துவங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டது. 
இதற்கு தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்தது பின்வருமாறு, தேர்தலை பொறுத்தவரை பக்கா ப்ளானிங் செய்து கூட்டணி கட்சிகளை அமைத்து அதிமுக வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், தினகரன் நான் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுவேன் என கூறினால் எப்படி ஜெயிக்க முடியும்? 
 
அதிமுக அவர்கள் போட்ட திட்டத்தை சக்சஸ் ஃபுல்லாக முடித்து காட்டியுள்ளனர். அதை மறுக்க முடியாது ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என பதிலளித்துள்ளார்.