ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருக்கரதால நடக்கல... கருணாஸுக்குள் எவ்வளவு வில்லத்தனம்

Last Updated: புதன், 14 ஆகஸ்ட் 2019 (17:11 IST)
மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை அதிரடியாக பறித்தார். தற்போது அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கவனித்து வருகிறார். 
 
இந்நிலையில் இது குறித்து கருணாஸிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர், மணிகண்டன் அமைச்சர் பதவியி இருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணம். மணிகண்டன் பற்றி முதன் முதலில் முதல்வரிடம் புகார் கொடுத்தது நான் தான். 
 
அதேபோல், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். 


இதில் மேலும் படிக்கவும் :