புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2017 (00:20 IST)

1-12 வகுப்புகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியீடு

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருந்து வரும் நிலையில் தற்போது 1 முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்திற்காக வரைவு பாடத்திட்டம் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.





இந்த புதிய வரைவு பாடத்திட்டம் www.tnscert.org என்ற இணையதளத்தில் ccematerial என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடத்திட்டம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பொதுமக்கள், கல்வியாளர்கள்  ஆகியோர்கள் 15 நாட்களில் கருத்து கூறலாம். இந்த புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கள் ஏற்புடையதாக இருந்தால் அதன்படி பாடத்திட்டத்தில் திருத்தம் செய்யப்படலாம் என தெரிகிறது.