ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோல்வி: தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஒன்றான ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே சமூக நல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விளையாட்டால் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர்கதையாக உள்ளது
இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததை அடுத்து மன அழுத்தம் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி மாநிலம் கோர்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் சிம் கார்டு விற்பனை மற்றும் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்
இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் அவர் ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக தெரிகிறது. இதில் அவர் அதிக பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடியதால் கடன் அதிகமானதால் ஒரு கட்டத்தில் மன உளைச்சல் அடைந்த விஜயகுமார் திடீரென தீ குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்