1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (17:42 IST)

ஆன்லைன் கல்வி; மாணவர்களுக்காக மலைப்பகுதியில் செல்போன் டவர் அமைத்த நடிகர்

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு, ஏழைகளுக்கும்,விவசாயிகளுக்கும் பல்வேறு உதவிகள் செய்துள்ளவர் நடிகர் சோனு சூட்.
 
இவர் படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார். தனது மனித நேயச் செயல்பாட்டுக்காக அவர் ஐநாசபையில் சமீபத்தில் விருது பெற்றுள்ளார். 
 
இந்நிலையில், ஹரியானா மாநிலம் மோர்னி மலைப் பகுதியில் உள்ள கிராமத்தில் ஒரு சிறுமி ஆன்லைன் கல்விக்காக மரத்தில் ஏறி ஆபத்தான முறையில் கல்வி கற்று வந்தார்.
 
இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதைப் பார்த்த நடிகர் சோனு சூட், ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓவிடம் தொடர்புகொண்டு செல்போன் டவர் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட அவர் தற்போது இதற்கான செயல்திட்டத்தைச் தொடங்கி டவர் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் அக்கிராமத்திற்கு சிக்னல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.