1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (10:15 IST)

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை.. கொரியர் மூலம் டெலிவரி.. பிடிபட்ட வாலிபர்கள்..!

ஆன்லைன் மூலம் ஆர்டர் வாங்கி போதை மாத்திரை சப்ளை செய்த சென்னை வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ள நிலையில் இது குறித்து தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது

அந்த வகையில் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை செய்த நிலையில் சீனிவாசன், ஸ்டீபன் ஆகிய இரண்டு வாலிபர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் ஆர்டர் வாங்கி கொரியர் மூலம் அனுப்பி டெலிவரி செய்ததாக கண்டுபிடித்தார்


இதனை அடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கொரியர் மூலம் கஸ்டமர் ஒருவர் வாங்கிய போது கையும் களவுமாக போலீசார் பிடித்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்  

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது போன்ற விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran