வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (10:25 IST)

மேலும் ஆயுதங்களை குவிக்கும் அமெரிக்கா.. அடுத்த பல மாதங்கள் போர் நீட்டிக்கும்! – இஸ்ரேல் அதிர்ச்சி அறிவிப்பு!

Israel attack
இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போரால் ஏராளமான பாலஸ்தீன் மக்கள் இறந்து வரும் நிலையில் மேலும் பல மாதங்கள் போர் நீடிக்கும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே போர் மூண்ட நிலையில் ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன் மக்கள் பலியாகியுள்ளனர். இதனால் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பல வலியுறுத்தி வருகின்றன.

இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டனர். அதை தொடர்ந்து அதற்கு பின் மீண்டும் இஸ்ரேல் காசாவை மோசமாக தாக்கி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கூட சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்து வரும் அமெரிக்கா மேலும் 147 மில்லியன் பெருமானமுள்ள ஆயுதங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் காசா மீதான போர் மேலும் பல மாதங்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K