1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Onion rate at koyambedu is only rs.8

ஒரு கிலோ ரூ.8 மட்டுமே.. வெங்காய விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Onion
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் எட்டு ரூபாய்க்கு விற்பனையாகி வருவது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தாலும் விவசாயிகள் மிகுந்த வருத்தமாக அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரித்து வந்ததை அடுத்து வெங்காயத்தின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வந்தது.

கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் படிப்படியாக குறைந்து 20, 15 என விற்பனையானது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால்  ரூபாய் 8 முதல் 10 வரை மட்டுமே ஒரு கிலோ வெங்காயம் விற்பனை ஆகி வருவதாக வெங்காய வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
வெங்காய விலை வீழ்ச்சி காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் வெங்காய விவசாயிகள் காணும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஏற்கனவே வடமாநிலங்களில் இரண்டு ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுவதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவே உள்ளோம்: வடமாநில தொழிலாளர்கள்