1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. North Indian labours are secure in tamil nadu

தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவே உள்ளோம்: வடமாநில தொழிலாளர்கள்

north indians
தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவே உள்ளோம்: வடமாநில தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்றும் எங்களுக்கு தமிழ்நாட்டில் எந்தவித அச்சுறுத்தலும் பிரச்சனையும் இல்லை என்றும் வடமாநில தொழிலாளர்கள் பேட்டி அளித்துள்ளனர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர் தாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பீகார் மாநில சட்டமன்றத்தில் இது குறித்த பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால் தமிழக டிஜேபி சைலேந்திரபாபு அவர்கள் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் ஹோலி பண்டிகை கொண்டாட வட மாநிலத்திற்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் பேட்டி அளித்தபோது ஹோலி பண்டிகை கொண்டாட நாங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம் என்றும் பண்டிகை முடித்துவிட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்புவோம் என்றும் தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்றும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பீகாரை சேர்ந்த 4 பேர்கள் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
யுபிஎஸ்சி தேர்வில் பெயில் ஆன ChatGPT .. 100க்கு 54 மதிப்பெண்கள் மட்டுமே!