சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகமாகலாம்! அதிர்ச்சி தகவல்!
சின்ன வெங்காயம் இப்போது சந்தைகளில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு வெங்காயம் விநியோகிக்கும் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா கனமழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் காய்கறி சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கும் விற்பனையாகி வருகிறது. முன்கூட்டிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெங்காய விலை உயர்வுக்குக் காரணமே காலம் தாண்டிய பருவ மழை பெய்ததே என சொல்லப்படுகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயங்கள் எல்லாம் நாசமாகின.
இந்நிலையில் இப்போது 120 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளிலும் நோய்த்தாக்குதல் அதிகமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.