வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலை சீர்படுத்தும் மருத்துவகுணம் கொண்ட வெங்காயம் !!

வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு என்ற எண்ணெய் தான். இந்த எண்ணெய் தான் வெங்காயத்தை உரிக்கும்போது திரவத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்களில் பட்டு கண்ணீர் வர வைக்கிறது.

வெங்காயத்தை தோலுரித்து அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும். மேலும் பித்த ஏப்பமும்  மறையும்.
 
தினமும் மூக்கின் இரு துவாரங்களிலும் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் என இந்த மூன்று வகைகளில் ஒன்றை காலை மாலை என  இரு வேளையும் தடவுங்கள்.
 
புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றினை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.
 
வெங்காயச்சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர குணமாகும்.
 
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். வெங்காயச்சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.