1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும்  வெங்காயத்தை  பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத்  தாராளமாகச்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.ரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
 
வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் பி  குருப் வைட்டமின் ஆகும்.
 
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும். இரத்தம் விருத்தியாக தினமும் பச்சை வெங்காயம்  சாப்பிட வேண்டும்.
 
செரிமானம் அடைய தினமும் வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது மற்ற உணவுகளுடன் கலந்தோ சாப்பிட்டால் செரிமானம் பிரச்சனைகள்  குணமாகும்.
 
காய்ச்சல், சிறுநீரக கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸியில் அரைத்து இரசமாக வைத்து அருந்தினால் குணமாகும்.
 
வெங்காயம் உடலுக்கு குளிர்சி அளிக்கும் மருந்து என்பதால் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்க 100 கிராம் வெங்காயத்தை  தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.