1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ONGC Nallandarkollai tank fired

ஒன்.என்.ஜி.சி எண்ணெய் தொட்டியில் திடீர் தீ: பற்றி எரியும் நல்லாண்டார்கொல்லை

ongc
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் தீவிரமான போராட்டம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே



 
 
இந்த நிலையில் இன்று நல்லாண்டார்கொல்லை கொல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் தொட்டி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிவதாகவும், இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்ட ஒன்.என்.ஜி.சி  அதிகாரிகள் நல்லாண்டார்கொல்லை எண்ணெய் தொட்டி கழிவு தொட்டி என்றும், இந்த தொட்டியை நிரந்தரமாக மூட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக களமிறங்கும் தலைமை செயலக ஊழியர்கள்