செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:35 IST)

இந்த ஆயிலை தேய்ச்சா ஆம்பள புள்ள பொறக்கும். ஏமாற்றிய சாமியார் எண்ணுகிறார் கம்பியை

உண்மையான சாமியார்களை விட பலமடங்கு போலிச்சாமியார்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு சாமியார் பாலியல் வழக்கில் சிக்கி கம்பி எண்ணி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு சாமியார் நூதன முறையில் ஏமாற்றி பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்



 
 
கர்ப்ப்பிணி பெண்களுக்கு ஒரு பாட்டில் ரூ.20000 என ஒரு ஆயிலை விற்பனை செய்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த இந்த சாமியார். இந்த ஆயிலை கர்ப்பிணிகள் வயிற்றில் தேய்த்தால் ஆண் பிள்ளை பிறக்கும் என்பதை நம்பி பல பெண்கள் கணவருக்கு தெரியாமல் வாங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் ஆயிலை தேய்த்தும் ஆண் குழந்தை பிறக்காததால் ஏமாந்த பெண்மணிகள் சிலர் கொடுத்த புகார் காரணமாக தற்போது இந்த சாமியார் ஐதராபாத் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.