செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (08:16 IST)

ரவுடியை கழுத்தறுத்து கொலை செய்த மற்றொரு ரவுடி என்கவுண்டர்: கடலூரில் பயங்கரம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரவுடி ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த மற்றொரு ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறு என்ற பகுதியில் வீரா என்ற ரவுடி நேற்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது கிருஷ்ணா என்ற மற்றொரு ரவுடி என்ற தகவல் கிடைத்த நிலையில் அவரைப் பிடிப்பதற்காக போலீசார் தீவிர முயற்சி செய்தனர் 
 
இந்த நிலையில் கிருஷ்ணா இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்ய முயற்சித்தபோது போலீசாரிடம் இருந்து தப்பியதாகவும் போலீசாரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து போலீசார் என்கவுன்டர் செய்ததில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ரவுடியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கிருஷ்ணாவை பிடிக்க முயன்ற போலீசார் திருப்பி தாக்கியதால் இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த என்கவுண்டர் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது